அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாக்களித்த புகைப்படங்கள் - ஒரு தொகுப்பு
பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருந்ததை ஊடகங்கள் நேரலை செய்தன.
காலை 9 மணிக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டனர்.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களித்த புகைப்படங்கள்....
படக்குறிப்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.ஸ்டாலின் இத்தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.
படக்குறிப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
படக்குறிப்பு, மைலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் மைலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார்.
படக்குறிப்பு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.மக்கள் நீதி மய்யம் இத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. கமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
படக்குறிப்பு, தேமுதிக தலைவர் பிரேமலதா, அவருடைய மகன்களுடன் சென்று சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிரேமலதா திமுக கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியிலும் அவரின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
படக்குறிப்பு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி திருவெறும்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவர் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
படக்குறிப்பு, பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமாரும் அவரது மனைவி நடிகை ராதிகாவும் திருவான்மியூரில் வாக்களித்தனர்.
படக்குறிப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே. வாசன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தபோது
படக்குறிப்பு, அமமுக தலைவர் டிடிவி தினகரன் அடையாறு கற்பகம் அவென்யூ பகுதியில் உள்ள தமோதரபுரம் அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
படக்குறிப்பு, நடிகர் பிரபு அவருடைய மகனும் நடிகருமான விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
படக்குறிப்பு, இயக்குநர் பா. ரஞ்சித் வாக்களித்தபோது
படக்குறிப்பு, நடிகர் விக்ரம் வாக்களித்தார்
படக்குறிப்பு, நடிகர் தனுஷ் வாக்களித்தபோது
படக்குறிப்பு, சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் சென்று வாக்களித்தார்.
படக்குறிப்பு, நடிகர் விஜய் சேதுபதி வாக்களித்துவிட்டு திரும்பிய போது...
படக்குறிப்பு, நடிகை திரிஷா வாக்களித்துவிட்டு திரும்பிய போது...
படக்குறிப்பு, நடிகர் ஹரிஷ் கல்யாண் வாக்களித்த பின்