குவைத் புதிய சட்டம் : பறிபோகும் வேலைவாய்ப்புகள், பரிதவிக்கும் இந்தியர்கள் - பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்

பட மூலாதாரம், Getty Images
பிரதிக் தேசாய், லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறியாளர். கடந்த 25 ஆண்டுகளாக குவைத்தில் வசித்து வருகிறார். ஆனால், அவரது எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை.
என்ன காரணம்?
வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் மசோதா குவைத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை.

பட மூலாதாரம், Getty Images
அரசு மட்டும் அனுமதித்துவிட்டால், பிரதிக் தேசாயுடன் சேர்த்து குவைத்தில் வசிக்கும் 8 லட்சம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். குவைத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். இதனை 30 சதவீதமாக குறைக்கத் திட்டமிடுகிறது குவைத்.
இப்போது குவைத்தில் வசிக்கும் 70 சதவீத வெளிநாட்டவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
குவைத்தின் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது. உள்ளூர் மக்களே வேலை வாய்ப்பில்லாமல் பரிதவிக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்படியான சட்டம் நிறைவேற்றப்படுவதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்.
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பணியாளர்களால் ஒரு சமநிலையற்ற நிலை குவைத்தில் நிலவுகிறது. எதிர்காலத்தில் இது பெரிய சவாலாக இருக்கப் போகிறது என்று குவைத் பிரதமர் ஷேக் சபா கூறியதாக குவைத் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் மட்டுமல்ல, குவைத்தில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் மக்கள், வங்கதேச மக்கள், எகிப்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் இதன் காரணமாகப் பேரிழப்பைச் சந்திக்கப் போகிறார்கள்.
இந்தியா கூறுவது என்ன?
இது தொடர்பாக குவைத் அரசுடன் முன்பே பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறது இந்திய அரசு.
பிற அரபு தேசங்களைவிட குவைத்தில் இந்தியச் சமூகம் நன்கு அங்கீகரிக்கப்பட்டார்கள், மதிக்கப்பட்டார்கள். நாம் நமது எதிர்பார்ப்பைச் சொல்லிவிட்டோம். நமது கருத்தையும் எடுத்துக் கொண்டே இந்த சட்டம் தொடர்பாக குவைத் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தா.

பட மூலாதாரம், Getty Images
இது வேலை பறிபோவது மட்டுமல்ல. மீண்டும் நாங்கள் இந்தியாவுக்கே வர நேரும் என்கிறார் பிரதிக் தேசாய்.
அவர், "ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்தால், அந்த பகுதியுடன் நமக்கு உணர்வுப்பூர்வமாக பந்தம் ஏற்பட்டுவிடும். பொருளாதார இழப்பைவிட இதுதான் எனக்குப் பேரிழப்பாக தெரிகிறது," என்கிறார்.
இந்தியாவின் அந்நிய செலவாணியில் குவைத் பெரும்பங்கு வகிக்கிறது. பியூ ஆய்வு மையம் அளிக்கும் தகவலின்படி, 2017ஆம் ஆண்டு மட்டும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி உள்ளனர்.
ஏறத்தாழ் 3 லட்சம் இந்தியர்கள் ஓட்டுநர்களாக, சமையற் கலைஞர்களாக, வீட்டை பராமரிப்பவர்களாக குவைத்தில் வசிக்கிறார்கள்.
ஒருவேளை இவர்களை பணிநீக்கம் செய்யும்பட்சத்தில் உள்ளூர் மக்களைக் கொண்டு இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்கின்றனர் சிலர்.

பட மூலாதாரம், Getty Images
குவைத்தின் பொருளாதாரம் அதிகமாக எண்ணெய் வளத்தைச் சார்ந்து இருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்யின் வீழ்ச்சிதான் இவ்வாறாகப் பிரதிபலிக்கிறது.
இனி என்ன நடக்கும்?
இந்த மசோதாவானது மற்றொரு குழுவுக்கு அனுப்பப்படும். அவர்கள் இது தொடர்பாக விரிவாகத் திட்டமிடுவார்கள்.
அரசின் கருத்துக்காக குவைத்தின் சட்டப்பேரவையும் காத்திருப்பதாகக் கூறுகிறது குவைத் டைம்ஸ் நாளிதழ்.
சாத்தியமில்லை
ஏறத்தாழ 8 லட்சம் பேரை இந்தியாவுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என்று பிபிசியிடம் கூறுகிறார் கைசர் ஷாகீர்.
இவர் அங்கு ஒரு கட்டட நிறுவனத்தில் தணிக்கையாளராக பணியாற்றுகிறார்.
அவர், "இந்த மசோதா அமல்படுத்தப்படும் என எனக்குத் தோன்றவில்லை. குவைத் அரசாங்கம் இந்தியர்கள் விஷயத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அவர்களை அனுப்பாது," என்கிறார்.
வேலையில்லா திண்டாட்டம் குவைத்தில் அதிகரித்து வருவது, அரசுக்கு கடும் அழுத்தத்தைத் தந்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டில் பயின்ற குவைத் மக்கள், மீண்டும் குவைத் வந்து அங்கு பணியாற்ற விரும்புகிறார்கள்.
அவர்களுக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வேறு எங்குக் கிடைக்கும்? இதன் காரணமாகத் திறமையான இந்தியர்கள் கூட பணி இழக்க நேரிடலாம் என்கிறார் குவைத்தில் வசிக்கும் இந்தியத் தணிக்கையாளர் ப்ரைன் தாமஸ்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வரைபடம்
உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்
முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST
விரிவான தகவல்கள்
*1 லட்சம் பேரில் உயிரிழந்தவர்கள்
| அமெரிக்கா | 1,012,833 | 308.6 | 87,030,788 | ||
| பிரேசில் | 672,033 | 318.4 | 32,535,923 | ||
| இந்தியா | 525,242 | 38.4 | 43,531,650 | ||
| ரஷ்யா | 373,595 | 258.8 | 18,173,480 | ||
| மெக்சிகோ | 325,793 | 255.4 | 6,093,835 | ||
| பெரு | 213,579 | 657.0 | 3,640,061 | ||
| பிரிட்டன் | 177,890 | 266.2 | 22,232,377 | ||
| இத்தாலி | 168,604 | 279.6 | 18,805,756 | ||
| இந்தோனீசியா | 156,758 | 57.9 | 6,095,351 | ||
| பிரான்ஸ் | 146,406 | 218.3 | 30,584,880 | ||
| இரான் | 141,404 | 170.5 | 7,240,564 | ||
| ஜெர்மனி | 141,397 | 170.1 | 28,542,484 | ||
| கொலம்பியா | 140,070 | 278.3 | 6,175,181 | ||
| அர்ஜெண்டினா | 129,109 | 287.3 | 9,394,326 | ||
| போலந்து | 116,435 | 306.6 | 6,016,526 | ||
| உக்ரைன் | 112,459 | 253.4 | 5,040,518 | ||
| ஸ்பெயின் | 108,111 | 229.6 | 12,818,184 | ||
| தென் ஆஃப்ரிக்கா | 101,812 | 173.9 | 3,995,291 | ||
| துருக்கி | 99,057 | 118.7 | 15,180,444 | ||
| ருமேனியா | 65,755 | 339.7 | 2,927,187 | ||
| பிலிப்பீன்ஸ் | 60,602 | 56.1 | 3,709,386 | ||
| சிலி | 58,617 | 309.3 | 4,030,267 | ||
| ஹங்கேரி | 46,647 | 477.5 | 1,928,125 | ||
| வியட்நாம் | 43,088 | 44.7 | 10,749,324 | ||
| கனடா | 42,001 | 111.7 | 3,958,155 | ||
| செக் குடியரசு | 40,324 | 377.9 | 3,936,870 | ||
| பல்கேரியா | 37,260 | 534.1 | 1,174,216 | ||
| மலேசியா | 35,784 | 112.0 | 4,575,809 | ||
| ஈக்குவடார் | 35,745 | 205.7 | 913,798 | ||
| பெல்ஜியம் | 31,952 | 278.2 | 4,265,296 | ||
| ஜப்பான் | 31,328 | 24.8 | 9,405,007 | ||
| தாய்லாந்து | 30,736 | 44.1 | 4,534,017 | ||
| பாகிஸ்தான் | 30,403 | 14.0 | 1,539,275 | ||
| கிரேக்கம் | 30,327 | 283.0 | 3,729,199 | ||
| வங்கதேசம் | 29,174 | 17.9 | 1,980,974 | ||
| துனீசியா | 28,691 | 245.3 | 1,052,180 | ||
| இராக் | 25,247 | 64.2 | 2,359,755 | ||
| எகிப்து | 24,723 | 24.6 | 515,645 | ||
| தென் கொரியா | 24,576 | 47.5 | 18,413,997 | ||
| போர்ச்சுகல் | 24,149 | 235.2 | 5,171,236 | ||
| நெதர்லாந்து | 22,383 | 129.1 | 8,203,898 | ||
| பொலிவியா | 21,958 | 190.7 | 931,955 | ||
| ஸ்லோவாக்கியா | 20,147 | 369.4 | 2,551,116 | ||
| ஆஸ்திரியா | 20,068 | 226.1 | 4,499,570 | ||
| மியான்மர் | 19,434 | 36.0 | 613,659 | ||
| ஸ்வீடன் | 19,124 | 185.9 | 2,519,199 | ||
| கஜகஸ்தான் | 19,018 | 102.7 | 1,396,584 | ||
| பராகுவே | 18,994 | 269.6 | 660,841 | ||
| குவாத்தமாலா | 18,616 | 112.1 | 921,146 | ||
| ஜார்ஜியா | 16,841 | 452.7 | 1,660,429 | ||
| இலங்கை | 16,522 | 75.8 | 664,181 | ||
| செர்பியா | 16,132 | 232.3 | 2,033,180 | ||
| மொராக்கோ | 16,120 | 44.2 | 1,226,246 | ||
| குரேஷியா | 16,082 | 395.4 | 1,151,523 | ||
| போஸ்னியா-ஹெர்சகோவினா | 15,807 | 478.9 | 379,041 | ||
| சீனா | 14,633 | 1.0 | 2,144,566 | ||
| ஜோர்டான் | 14,068 | 139.3 | 1,700,526 | ||
| சுவிட்சர்லாந்து | 13,833 | 161.3 | 3,759,730 | ||
| நேபாளம் | 11,952 | 41.8 | 979,835 | ||
| மால்டோவா | 11,567 | 435.2 | 520,321 | ||
| இஸ்ரேல் | 10,984 | 121.3 | 4,391,275 | ||
| ஹாோண்டுரஸ் | 10,906 | 111.9 | 427,718 | ||
| லெபனான் | 10,469 | 152.7 | 1,116,798 | ||
| ஆஸ்திரேலியா | 10,085 | 39.8 | 8,291,399 | ||
| அஜர்பைஜான் | 9,717 | 96.9 | 793,388 | ||
| மாசிடோனியா | 9,327 | 447.7 | 314,501 | ||
| சௌதி அரேபியா | 9,211 | 26.9 | 797,374 | ||
| லித்துவேனியா | 9,175 | 329.2 | 1,162,184 | ||
| ஆர்மீனியா | 8,629 | 291.7 | 423,417 | ||
| கியூபா | 8,529 | 75.3 | 1,106,167 | ||
| கோஸ்டா ரிக்கா | 8,525 | 168.9 | 904,934 | ||
| பனாமா | 8,373 | 197.2 | 925,254 | ||
| ஆஃப்கானிஸ்தான் | 7,725 | 20.3 | 182,793 | ||
| எத்தியோப்பியா | 7,542 | 6.7 | 489,502 | ||
| அயர்லாந்து | 7,499 | 151.8 | 1,600,614 | ||
| உருகுவே | 7,331 | 211.8 | 957,629 | ||
| தைவான் | 7,025 | 29.5 | 3,893,643 | ||
| பெலாரஸ் | 6,978 | 73.7 | 982,867 | ||
| அல்ஜீரியா | 6,875 | 16.0 | 266,173 | ||
| ஸ்லோவேனியா | 6,655 | 318.7 | 1,041,426 | ||
| டென்மார்க் | 6,487 | 111.5 | 3,177,491 | ||
| லிபியா | 6,430 | 94.9 | 502,189 | ||
| லாட்வியா | 5,860 | 306.4 | 837,182 | ||
| வெனிசுவேலா | 5,735 | 20.1 | 527,074 | ||
| பாலத்தீனம் | 5,662 | 120.8 | 662,490 | ||
| கென்யா | 5,656 | 10.8 | 334,551 | ||
| ஜிம்பாப்வே | 5,558 | 38.0 | 255,726 | ||
| சூடான் | 4,952 | 11.6 | 62,696 | ||
| ஃபின்லாந்து | 4,875 | 88.3 | 1,145,610 | ||
| ஓமன் | 4,628 | 93.0 | 390,244 | ||
| டொமினிக்கன் குடியரசு | 4,383 | 40.8 | 611,581 | ||
| எல் சால்வடார் | 4,150 | 64.3 | 169,646 | ||
| நமீபியா | 4,065 | 163.0 | 169,247 | ||
| ட்ரினிடாட் மற்றும் டொபாகோ | 4,013 | 287.7 | 167,495 | ||
| ஜாம்பியா | 4,007 | 22.4 | 326,259 | ||
| உகாண்டா | 3,621 | 8.2 | 167,979 | ||
| அல்பேனியா | 3,502 | 122.7 | 282,690 | ||
| நார்வே | 3,337 | 62.4 | 1,448,679 | ||
| சிரியா | 3,150 | 18.5 | 55,934 | ||
| நைஜீரியா | 3,144 | 1.6 | 257,637 | ||
| ஜமைக்கா | 3,144 | 106.6 | 143,347 | ||
| கொசோவோ | 3,140 | 175.0 | 229,841 | ||
| கம்போடியா | 3,056 | 18.5 | 136,296 | ||
| கிர்கிஸ்தான் | 2,991 | 46.3 | 201,101 | ||
| போட்ஸ்வானா | 2,750 | 119.4 | 322,769 | ||
| மொண்டெனேகுரோ | 2,729 | 438.6 | 241,190 | ||
| மலாவி | 2,646 | 14.2 | 86,600 | ||
| எஸ்தோனியா | 2,591 | 195.3 | 580,114 | ||
| குவைத் | 2,555 | 60.7 | 644,451 | ||
| ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 2,319 | 23.7 | 952,960 | ||
| மொசாம்பிக் | 2,212 | 7.3 | 228,226 | ||
| மங்கோலியா | 2,179 | 67.6 | 928,981 | ||
| யேமன் | 2,149 | 7.4 | 11,832 | ||
| செனகல் | 1,968 | 12.1 | 86,382 | ||
| கேமரூன் | 1,931 | 7.5 | 120,068 | ||
| அங்கோலா | 1,900 | 6.0 | 101,320 | ||
| உஸ்பெகிஸ்தான் | 1,637 | 4.9 | 241,196 | ||
| நியூசிலாந்து | 1,534 | 31.2 | 1,374,535 | ||
| பஹ்ரைன் | 1,495 | 91.1 | 631,562 | ||
| ருவாண்டா | 1,460 | 11.6 | 131,270 | ||
| கானா | 1,452 | 4.8 | 166,546 | ||
| சிங்கப்பூர் | 1,419 | 24.9 | 1,473,180 | ||
| சுவாசிலாந்து | 1,416 | 123.3 | 73,148 | ||
| மடகாஸ்கர் | 1,401 | 5.2 | 65,787 | ||
| காங்கோ ஜனநாயக குடியரசு | 1,375 | 1.6 | 91,393 | ||
| சூரிநாம் | 1,369 | 235.5 | 80,864 | ||
| சோமாலியா | 1,361 | 8.8 | 26,803 | ||
| கயானா | 1,256 | 160.5 | 67,657 | ||
| லக்சம்பர்க் | 1,094 | 176.5 | 265,323 | ||
| சைப்ரஸ் | 1,075 | 89.7 | 515,596 | ||
| மொரீசியஸ் | 1,004 | 79.3 | 231,036 | ||
| மாரிடானியா | 984 | 21.7 | 60,368 | ||
| மார்டினிக் | 965 | 257.0 | 195,912 | ||
| குவாதலூப் | 955 | 238.7 | 168,714 | ||
| ஃபிஜி | 866 | 97.3 | 65,889 | ||
| தான்சானியா | 841 | 1.4 | 35,768 | ||
| ஹைட்டி | 837 | 7.4 | 31,677 | ||
| பஹாமாஸ் | 820 | 210.5 | 36,101 | ||
| ரீயூனியன் தீவுகள் | 812 | 91.3 | 422,769 | ||
| ஐவரி கோஸ்ட் | 805 | 3.1 | 83,679 | ||
| லோவோ ஜனநாயக மக்கள் குடியரசு | 757 | 10.6 | 210,313 | ||
| மால்டா | 748 | 148.8 | 105,407 | ||
| மாலி | 737 | 3.7 | 31,176 | ||
| லெசோத்தோ | 699 | 32.9 | 33,938 | ||
| பெலிஸ் | 680 | 174.2 | 64,371 | ||
| கத்தார் | 679 | 24.0 | 385,163 | ||
| பப்புவா நியூ கினி | 662 | 7.5 | 44,728 | ||
| பிரெஞ்சு பாலினீசியா | 649 | 232.4 | 73,386 | ||
| பார்படோஸ் | 477 | 166.2 | 84,919 | ||
| கினி | 443 | 3.5 | 37,123 | ||
| கேப் வர்டி | 405 | 73.6 | 61,105 | ||
| பிரெஞ்சு கயானா | 401 | 137.9 | 86,911 | ||
| புர்கினோ ஃபாசோ | 387 | 1.9 | 21,044 | ||
| காங்கோ | 385 | 7.2 | 24,128 | ||
| செயிண்ட் லூசியா | 383 | 209.5 | 27,094 | ||
| காம்பியா | 365 | 15.5 | 12,002 | ||
| நியூ கேலிடோனியா | 313 | 108.8 | 64,337 | ||
| நைஜர் | 310 | 1.3 | 9,031 | ||
| மாலத் தீவுகள் | 306 | 57.6 | 182,720 | ||
| கேபான் | 305 | 14.0 | 47,939 | ||
| லைபீரியா | 294 | 6.0 | 7,497 | ||
| குராசோ | 278 | 176.5 | 44,545 | ||
| டோகோ | 275 | 3.4 | 37,482 | ||
| நிகரகுவா | 242 | 3.7 | 14,690 | ||
| கிரெனேடா | 232 | 207.1 | 18,376 | ||
| புரூனே | 225 | 51.9 | 167,669 | ||
| அரூபா | 222 | 208.8 | 41,000 | ||
| சாட் | 193 | 1.2 | 7,426 | ||
| ஜிபோட்டி | 189 | 19.4 | 15,690 | ||
| மயோட்டே | 187 | 70.3 | 37,958 | ||
| ஈக்வடோரியல் கினி | 183 | 13.5 | 16,114 | ||
| ஐஸ்லாந்து | 179 | 49.5 | 195,259 | ||
| சேனல் தீவுகள் | 179 | 103.9 | 80,990 | ||
| கினி பிஸாவ் | 171 | 8.9 | 8,369 | ||
| சீசெல்ஸ் | 167 | 171.1 | 44,847 | ||
| பெனின் | 163 | 1.4 | 27,216 | ||
| கொமரோஸ் தீவுகள் | 160 | 18.8 | 8,161 | ||
| அண்டோரா | 153 | 198.3 | 44,177 | ||
| சாலமன் தீவுகள் | 153 | 22.8 | 21,544 | ||
| அண்டிகுவா மற்றும் பார்புடா | 141 | 145.2 | 8,665 | ||
| பெர்முடா | 140 | 219.0 | 16,162 | ||
| தெற்கு சூடான் | 138 | 1.2 | 17,722 | ||
| திமோர்-லெஸ்டே | 133 | 10.3 | 22,959 | ||
| தஜிகிஸ்தான் | 125 | 1.3 | 17,786 | ||
| சியாரா லியோன் | 125 | 1.6 | 7,704 | ||
| சான் மரினோ | 115 | 339.6 | 18,236 | ||
| செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனேடியர்ஸ் | 114 | 103.1 | 9,058 | ||
| மத்திய ஆஃப்ரிக்க குடியரசு | 113 | 2.4 | 14,649 | ||
| ஐல் ஆஃப் மேன் | 108 | 127.7 | 36,463 | ||
| ஜிப்ரால்ட்டர் | 104 | 308.6 | 19,633 | ||
| எரித்ரியா | 103 | 2.9 | 9,805 | ||
| சின்டு மார்தின் | 87 | 213.6 | 10,601 | ||
| லீச்சன்ஸ்டயின் | 85 | 223.6 | 17,935 | ||
| சாவ் டாம் மற்றும் ப்ரின்சிபீ | 74 | 34.4 | 6,064 | ||
| டொமினிகா | 68 | 94.7 | 14,852 | ||
| செயின்ட் மார்டின் (பிரெஞ்சு பகுதி) | 63 | 165.8 | 10,952 | ||
| பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள் | 63 | 209.8 | 6,941 | ||
| மொனாக்கோ | 59 | 151.4 | 13,100 | ||
| செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் | 43 | 81.4 | 6,157 | ||
| புரூண்டி | 38 | 0.3 | 42,731 | ||
| பொனேர், செயிண்ட் யுஸ்டாசியஸ் மற்றும் சபா | 37 | 142.4 | 10,405 | ||
| துருக்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் | 36 | 94.3 | 6,219 | ||
| கேமேன் தீவுகள் | 29 | 44.7 | 27,594 | ||
| சமாவோ | 29 | 14.7 | 14,995 | ||
| ஃபாரோ தீவுகள் | 28 | 57.5 | 34,658 | ||
| பூடான் | 21 | 2.8 | 59,824 | ||
| கிரீன்லாந்து | 21 | 37.3 | 11,971 | ||
| வனவாடூ | 14 | 4.7 | 11,389 | ||
| கிரிபாட்டி | 13 | 11.1 | 3,236 | ||
| டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக்கப்பல் | 13 | 712 | |||
| டோங்கா | 12 | 11.5 | 12,301 | ||
| அன்கிலா | 9 | 60.5 | 3,476 | ||
| மொண்டெசெரட் | 8 | 160.3 | 1,020 | ||
| வாலிஸ் மற்றும் ஃபுட்டூனா தீவுகள் | 7 | 61.2 | 454 | ||
| பலாவ் | 6 | 33.3 | 5,237 | ||
| செயிண்ட் பார்தெலேமி | 6 | 60.9 | 4,697 | ||
| எம்.எஸ் ஸாண்டம் சொகுசுக்கப்பல் | 2 | 9 | |||
| குக் தீவுகள் | 1 | 5.7 | 5,774 | ||
| செயிண்ட் பெர்ரீ மற்றும் மிகுவாலன் | 1 | 17.2 | 2,779 | ||
| ஃபாக்லாந்து தீவுகள் | 0 | 0.0 | 1,815 | ||
| மைக்ரோனீசியா | 0 | 0.0 | 38 | ||
| வாட்டிகன் | 0 | 0.0 | 29 | ||
| மார்ஷல் தீவுகள் | 0 | 0.0 | 18 | ||
| அண்டார்டிகா | 0 | 11 | |||
| செயிண்ட் ஹெலீனா | 0 | 0.0 | 4 |
முழுமையாக பார்க்க ப்ரௌசரை அப்டேட் செய்யுங்கள்
தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்
**புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.
ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்
கடைசியாக பதிவேற்றியது : 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
































