காணொளி: ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கிய பின்னர் திரும்பிச் சென்ற கப்பல்கள்
காணொளி: ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கிய பின்னர் திரும்பிச் சென்ற கப்பல்கள்
லெபனானில் போர்நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஹோர்மூஸ் நீரிணை தற்காலிகமாக திறக்கப்படுவதாக இரான் அறிவித்திருந்தது. இடைப்பட்ட நேரத்தில் சில கப்பல்கள் கடந்து சென்றதாக தகவல் வெளியான நிலையில் ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் மூடப்படுவதாக இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. இதற்கிடையே ஹோர்மூஸ் நீரிணை அருகே வரும் கப்பல்கள் திரும்பிச் சென்றதை உறுதிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு