காணொளி: 'ஊர் பெயரால் அவமரியாதை' - தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த கிராமம்
பொதுவாக நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது பெயர், படிப்பு, வேலை, இதைத் தாண்டி வரக்கூடிய அடுத்த கேள்வி 'எந்த ஊர்?'.
ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள் 'வடக்கு அச்சந்தவிழ்த்தான்' என்கிற குக்கிராம மக்கள்.
அதற்குக் காரணம், நிலப்பட்டாவில் 'அச்சந்தவிழ்த்தான்' என்றிருந்தாலும் சொத்து வரி ரசீது முதல் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை எனப் பல்வேறு அரசு ஆவணங்களில், அவர்களுடைய குக்கிராமத்தின் பெயர் 'பரச்சேரி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றியுள்ள பிற கிராம மக்களும் இந்த ஊரை 'பரச்சேரி' என்றே அழைக்கிறார்கள்.
"சாதி அடையாளத்தின் அடிப்படையில் இருக்கும் ஊரின் பெயரால் நாங்கள் பல அவமானங்களை எதிர்கொள்கிறோம். முதலில் எங்களிடம் நன்றாகப் பேசுவார்கள், ஆனால் ஊர் பெயரைக் கேட்டதும் எதிரில் இருப்பவர்களின் முகம் சட்டென மாறிவிடும். அவர்கள் பார்வையே எங்களை கூனிக்குறுகச் செய்துவிடும்" என்கிறார் சமூக ஆர்வலரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவருமான குமார்.
இந்தப் பிரச்னை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் முழு விவரம் காணொளியில்...
தயாரிப்பு: சிராஜ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நிஷாந்த்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



