You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'26 ரன்களுக்கு 4 விக்கெட்' - இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்?
ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த கேப்டன் அக்ஸர் படேலும் டக் ஆவுட் ஆக, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிக இக்கட்டான சூழலில் இருந்தது.
அடுத்து களம் இறங்கிய ஸ்டுப்ஸ், சமீர் ரஸ்வியுடன் கைகோர்க்க அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருவரும் சேர்ந்து 76 பந்துகளுக்கு 119 ரன்களை குவித்தனர்.
இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் சமீர் ரஸ்வி 70 ரன்களையும், ஸ்டுப்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர்.
17.1 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
லக்னௌ ஆட்டம் எப்படி?
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது.
லக்னௌ அணி சார்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். எய்டன் மார்கரமிற்கு முன்பாக ரிஷப் பண்ட் களமிறங்கியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த அதிரடி நிலைக்கவில்லை.
ரிஷப் பண்ட 9 ரன்களில் துர்திருஷ்டவசமாக ரன் அவுட் ஆக அதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கில் மாற்றம் செய்து பந்துவீச வந்தார். அக்சர் பந்துவீச்சில் எய்டன் மார்கரம் 11 ரன்களின் ஆட்டமிழந்தார்.
பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக களமிறங்கிய் ஆயுஷ் பதோனி 0 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்டரான நிகோலஸ் பூரனும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து லுங்கி நிகிடியின் அற்புதமான ஸ்லோயர் பந்தில் போல்டானார்.
பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு
ஒருபுறம் நிலைத்து ஆடிவந்த மிட்சல், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அவ்வப்போது கிடைத்துவந்தாலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன்ரேட் பெரிதளவில் உயரவில்லை. முகுல் சௌத்ரி 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷாபாஸ் அகமது இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார்.
அப்துல் சமாதும் ஷாபாஸ் அகமதும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில் சமாத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களி 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
16 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருந்த லக்னௌ அணி கடைசி 5 ஓவர்களி படிப்படியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி அணி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதன் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். லக்னௌ அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் மற்றும் மிட்சல் மார்ஷ் முறையே 36 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு