You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் - 10 பேர் பலி
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் போராட்டங்கள் நடந்தன.
பிபிசி உருதுவின்படி அங்குள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 10 பேர் கொல்லப்பட்டனர்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், சிலர் துணை தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைவதையும், வரவேற்பு மற்றும் பாதுகாப்பு அறையின் ஜன்னல்களை உடைப்பதையும் காண முடிகிறது.
இது ஆயத்துல்லா அலி காமனெயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே மக்கள் கூடிய ஒரு பொது ஆர்ப்பாட்டம் என்றும், தூதரகத்திற்குள் இருந்து தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மஜ்லிஸ்-இ-வஹ்தத் முஸ்லிமீனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு