You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இரானில் ஆட்சி மாற்றம்' - டிரம்ப் பேசியது என்ன?
இரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரானின் ஆட்சி மாற்றம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்து பேசிய டிரம்ப், "ஏற்கெனவே ஆட்சி மாற்றம் (இரானில்) நடந்துவிட்டது. ஏனெனில் ஒரு ஆட்சி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எல்லோரும் உயிரிழந்துவிட்டார்கள்.
அடுத்த ஆட்சியிலும் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். மூன்றாவது ஆட்சியில், இதற்கு முன் யாரும் சந்திக்காத புதிய மனிதர்களுடன் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
அது முற்றிலும் வேறுபட்ட ஒரு குழுவாகும். அதனால் இதை நான் ஆட்சி மாற்றமாகவே கருதுவேன். உண்மையில், அவர்கள் சமரசமாக நடந்து கொள்கின்றனர். அதனால், ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இதைவிட சிறப்பாக செய்ய முடியாது." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு