காணொளி: சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது தொடர்பான வழக்கில் மெட்டாவுக்கு சிக்கல்
காணொளி: சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது தொடர்பான வழக்கில் மெட்டாவுக்கு சிக்கல்
சிறுவயதிலேயே சமூக ஊடகங்களுக்கு அடிமையானதால் ஓர் இளம் பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டது குறித்த வழக்கில், மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்கள் திட்டமிட்டே மக்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் தங்கள் தளங்களை உருவாக்கியுள்ளதாக நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு இழப்பீடாக 6 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது போன்ற பிற வழக்குகளுக்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு முடிவாக இது அமைகிறது.
இந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை என்றும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் மெட்டா மற்றும் கூகிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு