காணொளி: இரான், அமெரிக்கா இடையே மத்யஸ்தம் செய்ய விரும்பும் பாகிஸ்தான் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்கா, இரான் இடையிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடக்க சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்தே, மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. இதை மோதி அரசின் ராஜீய ரீதியான தோல்வி என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. என்ன நடந்தது?
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான போர் இரண்டாவது மாதத்தை எட்டி இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இரான் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், மோதலுக்கு முழுமையான தீர்வை காண, உறுதியான பேச்சுவார்த்தை நிகழ்வை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவை டிரம்பும் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
எனவே, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



