இலங்கை குண்டுவெடிப்பு: மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது
பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI
மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர்.
மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆகியோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
காத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி தற்கொலைக் குண்டுதாரி, கல்முனை முதலாம் பிரிவில் திருமணம் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியின் தயாருடன், குண்டுதாரியின் சகோதரர் மற்றும் மாமா ஆகியோரை, இன்று காலை காத்தான்குடி பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரியான உதவிப் போலீஸ் பரிசோதகர் முகம்மட் மற்றும் சார்ஜன் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள, தற்கொலைக் குண்டுதாரியின் தலையை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றனர்.
இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி ஜயசூரிய முன்னிலையில், தற்கெலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தயார், சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்துக்கு இடமின்றி முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என அடையாளம் காட்டினர்.
சமூக சேவைகளில் ஈடுபட்ட சஹ்ரான் தடம் மாறியது எப்போது?
பிற செய்திகள்:
- இலங்கை கல்முனை குண்டுவெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு - 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்
- "தாக்குதலின் வலி எப்படி இருக்கும்?" - குமுறும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள்
- "எனக்கு குஜராத்திலேயே நீதி கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்" - பில்கிஸ் பானு
- ராமநாதபுரத்தில் பயங்கரவாதிகள் நுழைந்ததாக போலி தொலைப்பேசி அழைப்பு விடுத்தவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை