விஜய் மல்லையாவை நாடுகடத்த பிரிட்டன் அனுமதியளித்தது
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்ய 14 நாள் அவகாசமும் இருக்கிறது.
அவரை விசாரிக்க இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கிய இரண்டு மாதங்களுக்குபின் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிங் ஃபிஷர் நிறுவனத்தின் அதிபராக இருந்த மல்லையா , ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுடன் மார்ச் மாதம் 2016ஆம் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார்.
இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா , தனது கடன்களை தான் திருப்பி செலுத்தவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
கிங் ஃபிஷன் பியர் மூலம் பெரும் பணம் சம்பாதித்த விஜய் மல்லையா, பின் கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா 1 ரேஸ் போட்டிகளிலும் கால் பதித்தார். அவரை கடனாளியாக மாற்றிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தை 2005ஆம் ஆண்டு நிறுவினார் விஜய் மல்லையா.
கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக விஜய் மல்லையா மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவை மத்திய புலனாய்வு மற்றும் நிதி முறைகேடுகளை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
2012ஆம் ஆண்டு விஜய் மல்லையா தனது யூனைடெட் ஸ்பிரிட் குழுமத்தின் பெரும் பங்கை பிரிட்டனின் டியாகோ குளிர்பான நிறுவனத்திடம் விற்றார்.
அதன்படி கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2012ஆம் ஆண்டு கிங் ஃபிஷர் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து ஐந்து வருடங்கள் நஷ்டத்தில் ஓடிய கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்துக்கு யாரும் கடன் கொடுக்க முன் வராததால், நிறுவனம் திவாளானது.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.
ஊழியர்களுக்கு தரப்படாத ஊதியம் மற்றும் நிறுவனத்துக்கான செலுவுகள் உட்பட, விஜய் மல்லயாவின் மொத்த கடன் மதிப்புகள் மற்றும் 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு புகழ்பெற்ற விஜய் மல்லையா இந்தியாவின் "ரிசர்ட் பிரான்சன்" என்றும் அழைக்கப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை