சுதந்திர குப்பைத்தொட்டி: பெண்கள் பத்திரிகை
பெண்களுக்கான முதலாவது பத்திரிகையான "தி லேடிஸ் மெர்குரி" 1693ம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பெண்கள், மனைவியர் அல்லது கணவரை இழந்த பெண்களின் காதல், திருமணம், நடத்தை, உடை மற்றும் நகைச்சுவையான நிகழ்வுகள் என பெண்கள் தொடர்பான நல்ல மற்றும் ஆர்வத்தை தூண்டுபவை அனைத்தையும் இந்த இதழ் வெளியிட்டது.
இன்றைய நாளில் வெளிவருகின்ற பெண்களை பற்றிய இதழ்கள் ஃபேஷன், பிரபல நட்சத்திரங்களை பற்றிய கிசுகிசுப்புகள் உள்பட பிற தலைப்புகள் பற்றியும் வெளியிடுகின்றன.
வாசகர்கள் விரும்புகின்ற உள்ளடக்கங்களை வழங்குவதில் தாங்கள் வெற்றி அடைந்திருப்பதாக இந்த இதழ்களின் உரிமையாளர்களும், பதிப்பாசிரியர்களும் கூறிக்கொள்ளலாம்.
ஆனால், பிரபல நட்சத்திரங்கள் பற்றிய அதீத கவனம் இளைஞர்களின் மனநலத்தை ஆட்டிப்படைத்து பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், பிரபலங்களின் கலாசாரம்தான், தாங்களும் மிகவும் சிறப்பாக தோன்ற வேண்டும் என்ற அழுத்தம் தருவதாக 11 முதல் 16 வயது பதின்ம வயதினர் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை