You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கால்நடை வளர்ப்பு மூலம் சுய அடையாளத்தை உருவாக்கிய திருநங்கை
திருநங்கை ஸ்வீட்டி ஒரு கால்நடை விவசாயி. அதோடு ஹரியாணாவின் குஹானா பகுதியில் பால் பண்ணை ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார்.
அதுகுறித்துப் பேசிய அவர், "நான் வளரிளம் பருவத்தில் இருந்தே கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். முன்பு என்னிடம் 2-3 எருமைகள் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் அது பெருகியுள்ளது. நான் அதை விற்கவும் வாங்கவும் செய்கிறேன். சில நேரங்களில் என்னிடம் 90 முதல் 100 எருமைகள்கூட இருக்கும்" என்று தெரிவித்தார்.
ஸ்வீட்டி தனது சமூகத்துடன் சேர்ந்து நடனம்-பாடல் வேலைகளையும் செய்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் தமது சமூகத்தில் ஒரு மேய்ப்பராகத் தனது சுய அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இப்போது பிரசவம் அல்லது திருமணங்களில் நடனமாடச் செல்வதில்லை.
இவர் தனது பின்னணி காரணமாக சவால்களை எதிர்கொண்டார். ஆனால், ஒருவர் கடினமாக உழைத்தால் அவரைப் பிரச்னைகள் தடுக்காது என்கிறார் ஸ்வீட்டி.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு