காணொளி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான தகுதிகள் என்ன?

காணொளி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான தகுதிகள் என்ன?

தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?

சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் போட்டியிட விரும்பும் நபர், 25 வயது முடிந்த ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்து இருக்க வேண்டும். வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் உங்களுக்கு வாக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு 2 வருடம் அல்லது அதற்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர் இல்லை.

அரசாங்க வேலையில் சம்பளம் வாங்குபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேண்டுமென்றால் போட்டியிடலாம்.

மனநிலை சரியில்லாதவர் அல்லது நீதிமன்றத்தால் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள் கூட போட்டியிட முடியாது.

எஸ்சி/எஸ்டி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட விரும்பும் நபர், அந்த பிரிவைச் சேர்ந்தவராக மட்டும் தான் இருக்க முடியும். பொதுத் தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு