You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
இந்த வாரம் இராக் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன, அவை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தன.
செவ்வாய்க்கிழமை காலை, தலைநகர் பாக்தாத்தின் பலத்த பாதுகாப்புள்ள 'கிரீன் சோன்' என்றழைக்கப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் இலக்கு வைக்கப்பட்டது.
"மூன்று டிரோன்கள் மற்றும் நான்கு ராக்கெட்டுகள் தூதரகத்தைத் தாக்கின, அவற்றில் குறைந்தது ஒரு டிரோன் தூதரகத்திற்குள் விழுந்து நொறுங்கியது," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அந்த டிரோன்களுள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டன, ஆனால் மற்றொன்று தூதரக வளாகத்திற்குள் விழுந்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவே மிகவும் தீவிரமான தாக்குதல்," என்று இராக் பாதுகாப்பு அதிகாரிகள் ஏ.எஃப்.பி-யிடம் தெரிவித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு