காணொளி: விண்வெளியில் எவ்வாறு கழிவறையை பயன்படுத்துகிறார்கள்?
காணொளி: விண்வெளியில் எவ்வாறு கழிவறையை பயன்படுத்துகிறார்கள்?
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எவ்வாறு கழிவறையை பயன்படுத்துகிறார்கள்?
நிலவுக்கு செல்வதற்கான ஆர்ட்டெமிஸ் II திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னதாக, இதற்கான தீர்வை கண்டறிய நாசா ஆராய்ச்சியாளர்கள் 23 மில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவிட்டுள்ளனர்.
புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் மலம் மற்றும் சிறுநீரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு ‘Universal Waste Management System’ என்று அழைக்கப்படுகிறது.
சிறுநீர் சிந்தாமல் இருக்க காற்றின் ஓட்டத்தைப் பயன்படுத்தி அது சேகரிக்கப்படுகிறது. திடக் கழிவுகள் உறிஞ்சு விசை மூலம் சீல் வைக்கப்படுகின்றன.
விண்வெளி வீரர்கள் நிலைதடுமாறாமல் இருக்க, பிடிப்பான்கள் மூலம் அவர்கள் ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கொள்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு