You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரானில் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு
இரானில் அமெரிக்காவின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இதன் உண்மைத்தன்மையை பிபிசி வெரிபை உறுதிப்படுத்தி உள்ளது. இது இரானின் கோகிலுயே மற்றும் போயர் அஹ்மத் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி. இதில் குறைந்தது 2 ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பார்க்க முடிகிறது.
காணாமல் போன அமெரிக்க வீரரை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரியும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களின் முந்தைய காணொளிகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் பொருந்துகின்றன.
மலைகளில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு ஹெலிகாப்டர்களை வெற்றிகரமாக தாக்கியதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை முன்னர் கூறி இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு