காணொளி: மேற்கு வங்க தேர்தலில் இரு கட்சியினரிடையே மோதல்
மேற்கு வங்கத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஆம் ஜனதா உன்னாயன் (Aam Janata Unnayan) கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
நவோடா சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஷிப்நகர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை மற்றும் மத்திய படைகள் தடியடியில் ஈடுபட்டனர்.
ஆம் ஜனதா உன்னாயன் தலைவர் ஹுமாயுன் கபீர் வாக்குச்சாவடி இருக்கும் பகுதிக்கு வந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடக்கவுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



