You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பத்ம ஸ்ரீ விருது பெறும் இந்தர்ஜித் சிங் சித்து; யார் இவர்?
காணொளி: பத்ம ஸ்ரீ விருது பெறும் இந்தர்ஜித் சிங் சித்து; யார் இவர்?
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் டிஐஜியுமான இந்தர்ஜித் சிங் சித்துக்கு சமூக சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தர்ஜித் சிங் சித்துவுக்கு தற்போது 88 வயதாகிறது. பல ஆண்டுகளாக, சாலையில் நடக்கும் போதெல்லாம் குப்பைகளை எடுத்து அகற்றும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
சாலையில் குப்பையை பார்த்தால் அதை விட்டுவிட்டு நடந்து செல்ல முடியாது என்கிறார், இந்தர்ஜித் சிங். சாலைகள் நடப்பதற்காகத்தான்; குப்பை வீசுவதற்காக அல்ல என்றும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு