காணொளி: இந்த ஆசிரியர் பஞ்சர் கடையில், செங்கல் சூளையில் வகுப்புகளை நடத்துவது ஏன்?
உஜ்வாலா வடேகர், மகாராஷ்டிராவின் பத்ரியில் உள்ள ஒரு ஜில்லா பரிஷத் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பாடநூல்களுடன் சேர்த்து, மாணவர்கள் அன்றாட வாழ்வில் இருந்தும் அறிவைப் பெற வேண்டுமென அவர் கருதுகிறார்.
முறையான கல்வியுடன் இணைந்து, மாணவர்கள் நடைமுறை சார்ந்த கற்றலையும் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அவர் வகுப்பறையைத் தாண்டி ஒரு தனித்துவமான வகுப்பை நடத்துகிறார்.
அதுகுறித்துப் பேசிய அவர், “கற்றலில் 80 சதவிகிதம் கண்கள் வழியாகவே நடப்பதாகவும் மீதம் உடலின் பிற புலன்களின் மூலம் நடைபெறுவதாகவும் நாம் கூறுவதுண்டு. குழந்தைகள் அனைத்தையும் நேரடியாக அனுபவித்து உணர்வதை நான் உறுதி செய்கிறேன்.
செயல் மூலம் கற்பதும், கைகளால் தொட்டு உணர்வதும், கண்களால் உற்று நோக்குவதும் ஒருபோதும் மறக்காது. குழந்தைகளைப் பொறுத்தவரை, எழுத்துகள்கூட படங்களைப் போலத்தான். ஓர் எழுத்தின் வடிவம் அவர்களுக்கு ஒரு சித்திரத்தைப் போன்றது. இந்த அனைத்து அம்சங்களை நான் ஒருங்கிணைக்க முயல்கிறேன்" என்று தெரிவித்தார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு