You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: "இரானுடன் பேச்சுவார்த்தை" - டிரம்ப் கூறியது என்ன?
ரஷ்யா தொடர்பாகவும் இரான் தொடர்பாகவும் இன்று செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
அப்போது பேசிய டிரம்ப், "ரஷ்யா, யுக்ரேன் தொடர்பாக ஏதோ ஒன்று நடைபெறலாம். இரான் பற்றியும் நல்ல பேச்சுவார்த்தை நடந்தது. இரான் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புவது போல தெரிகிறது. அந்த ஒப்பந்தம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
ஆனால், இரான் ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறது போல எனக்கு தோன்றுகிறது, அது அவ்வாறே இருக்க வேண்டும். கடந்த முறை அவர்கள் அதைச் செய்யாமல் இருக்க முடிவு செய்தனர். ஆனால், இப்போது அவர்கள் வேறுபட்ட மனநிலையில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அந்த ஒப்பந்தம் என்ன என்பதைப் பார்க்கலாம். இது முந்தைய ஒப்பந்தத்தை விட வேறுபட்டதாக இருக்கும். எங்களிடம் பெரிய கடற்படை உள்ளது. அந்த திசையில் பெரிய படை சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் விரைவில் அங்கு இருப்போம். அது எப்படி அமையும் என்பதைப் பார்க்கலாம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு