காணொளி: ஹைதராபாத்தில் 200 கிலோ கோவில் மணியை தினமும் அடிக்கும் 'தமிழ்' மூதாட்டி
காணொளி: ஹைதராபாத்தில் 200 கிலோ கோவில் மணியை தினமும் அடிக்கும் 'தமிழ்' மூதாட்டி
மூதாட்டி ஒருவர் பிரமாண்டமான கோவில் மணியை அடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனியில் உள்ள வெங்கடேஸ்வர சுமாமி கோவிலில், தினமும் நடைபெறும் நைவேத்திய படையலின்போது, இந்த மூதாட்டி தினசரி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இடைவிடாது மணியடித்து வருவதாக அந்தக் கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்.
அவரது பெயர் ‘ராஜி’ என்றும், அவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் எனவும் அர்ச்சகர் கூறினார். அந்த மூதாட்டியிடம் பிபிசி பேச முயன்றபோது அவர் பேச மறுத்துவிட்டார். அவரது வாழ்க்கை குறித்த விவரங்களை கோவில் அர்ச்சகரான சேஷாச்சலம் பகிர்ந்துகொண்டார்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு