You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சித்தி சமூகத்தை உலக அரங்குக்கு எடுத்துச் செல்லும் ஜூடோ வீராங்கனை
சித்திகள் - இந்தியாவில் தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் ஆப்பிரிக்க வம்சாவளி சமூகம். ஆனால், விளையாட்டு தற்போது அவர்களில் சிலரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜூடோ வீராங்கனையான ஷாஹின் தார்ஜாதா 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில், தனது சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தினார். இந்தோனீசியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ஷாஹின் தார்ஜாதா தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியராவார். இதன் மூலம், பெருவில் நடைபெற இருக்கும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜூடோ, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் ஆமதாபாத் நகரில் உள்ள நவீன வசதிகள் கொண்ட இந்த பயிற்சி மையத்துக்கு ஷாஹினை கொண்டு வந்துள்ளது. ஆனால் அவரது கிராமத்தில், சிறுமிகள் மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்கின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், சித்திகள் பெரும்பாலும் அடிமைத் தொழிலாளர்களாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும், அவர்களின் தனித்துவமான தோற்றம் காரணமாக அவர்கள் இன்னும் சமூக அவமதிப்பும் பாகுபாடும் எதிர்கொண்டே வந்தனர்.
சமூக மனப்பான்மைகளில் மாற்றம் ஏற்பட்டாலும், இந்தியாவில் சுமார் இருபதாயிரம் பேர் கொண்ட சித்திகள் சமூகம் இன்னும் பெரும்பாலும் தனிமையாகவே இருந்து வந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளீயீடு