காணொளி: நாமக்கலில் பட்டியல் சாதி குழந்தைகளுக்கு தனி அங்கன்வாடியா? - பிபிசி கள ஆய்வு

காணொளி: நாமக்கலில் பட்டியல் சாதி குழந்தைகளுக்கு தனி அங்கன்வாடியா? - பிபிசி கள ஆய்வு

'பிரச்னைகளைப் பேசுவோம்' என்ற தலைப்பில் பிபிசி தமிழ் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் பகுதிகளில் நிலவும் சாதிய பிரச்னைகள் குறித்த பல தகவல்களை மக்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.

அதன் ஒரு பகுதியாக "எங்கள் ஊரில், சாதி என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு வயதுக் குழந்தைகளைக் கூட சாதியை காரணம் காட்டி, அரசு அங்கன்வாடிகளில் பிரித்து வைக்கிறார்கள்" என நாமக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து இருந்து பிபிசிக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் பிபிசி தமிழ் குழு அப்பகுதிக்கு சென்று கள ஆய்வு செய்தது. அதில் பிபிசி கண்டறிந்தவற்றை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு