காணொளி: இஸ்ரேலில் ஏவுகணை பாகத்துக்குள் விளையாடும் குழந்தைகள்

காணொளி: இஸ்ரேலில் ஏவுகணை பாகத்துக்குள் விளையாடும் குழந்தைகள்

இரான் போருக்கு இடையே தெற்கு இஸ்ரேலில் ஒரு கிராமத்தில் மிகப்பெரிய ஏவுகணை பகுதி ஒன்று கீழே கிடக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இந்த ஏவுகணை பாகத்திற்கு உள்ளே குழந்தைகள் புகுந்து விளையாடினர்.

பின்னர் அந்த பாகம் அந்த இடத்தில் இருந்து வேறொரு வாகனம் மூலம் அகற்றப்பட்டது. திங்கட்கிழமை யேமனிலிருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களை இடைமறித்ததாக இஸ்ரேலின் ராணுவம் தெரிவித்துள்ளது.

இரான் போர் தொடங்கிய பிறகு, இரான் ஆதரவு கொண்ட ஹூத்தி படைகள் முதல் முறையாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் இந்த போர் பிராந்தியம் முழுவதும் பரவியுள்ளது.

தெஹ்ரானில் உள்ள ராணுவ கட்டமைப்புகள் மற்றும் பெய்ரூட்டிலுள்ள ஹெஸ்பொலா பயன்படுத்தும் கட்டமைப்புகளையும் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு