You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையில் வீட்டின் கூரையை உடைத்து நாசமாக்கிய காட்டு யானை
கோவை காருண்யா பல்கலைக்கழகம் அருகேயுள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் மே 26-ம் தேதியான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று ஒரு வீட்டின் கூரையை உடைத்து சேதமாக்கியது.
இந்த வீடு குஞ்சம்மாள் என்பவருக்குச் சொந்தமானது. வழக்கமாக திண்ணையில் துாங்கும் அவர், நேற்று இரவு மழை பெய்ததால் வீட்டிற்குள் துாங்கியுள்ளார். அவர் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம் என்று அவரின் அக்காவின் மகன் செல்வராஜ் கூறுகிறார்.
ஒற்றைக்கொம்பன் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒரு தந்தம் மட்டுமே கொண்ட இந்த யானை பல ஆண்டுளாக இப்பகுதிக்கு வருவதாகவும் இந்த யானை இப்போதுதான் முதல் முறையாக இப்படி வீட்டை உடைத்திருப்பதாக செல்வராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு