You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 94 வயதில் தடகளத்தில் அசத்தும் பாட்டி
காணொளி: 94 வயதில் தடகளத்தில் அசத்தும் பாட்டி
“என் பெயர் பாணி தேவி. என் வயது 94. நான் குண்டு எறிவேன், வட்டு எறிவேன். 100 மீட்டர் ஓடுவேன்” என்கிறார் மாஸ்டர் தடகள வீரர் பாணி தேவி.
இவருடைய பேரன் ஜெய் கிஷன் இவரது பயிற்சியாளராக உள்ளார்.
“முதல்முறையாக, என் பாட்டி என்னுடன் மைதானத்திற்கு வந்த போது, குழந்தைகள் குண்டு எறிவதையும் ஓடுவதையும் பார்த்தார். என்னாலும் இதைச் செய்ய முடியும் என பாட்டி கூறினார். குழந்தைகளுடன் குண்டு எறிதலை முயற்சித்தார்” என்கிறார் ஜெய் கிஷன்.
இன்றும், பாணி தேவி தனது கனவை தொடர்ந்து துரத்துகிறார். மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு