காணொளி: 'ஆர்சிபி வெற்றிக்கு வித்திட்ட 3 முக்கிய விஷயங்கள்' - யோமகேஷ்
காணொளி: 'ஆர்சிபி வெற்றிக்கு வித்திட்ட 3 முக்கிய விஷயங்கள்' - யோமகேஷ்
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.
பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான்.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்ட மூன்று காரணங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் யோமகேஷ் விளக்குகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு