You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வழக்கில் இருந்து விடுதலை - கண்ணீர் விட்டு அழுத கேஜ்ரிவால்
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவையும் நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. லைவ் லா செய்தியின்படி, நீதிமன்றம் தனது தீர்ப்பில் சிபிஐ விசாரணையில் உள்ள குறைபாடுகள் குறித்து கடுமையான கருத்துகளையும் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் எந்தவொரு சாட்சியத்தின் வாக்குமூலத்திற்கும் வலுசேர்க்காத தகவல்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் "தவறான தகவல்கள்" அளிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் தெரிவித்தார். சிசோடியாவுக்கு எதிராக ஒரு முதற்கட்ட ஆதாரத்தைக் கூட சமர்ப்பிக்க சிபிஐ தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியது.
மேலும், எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கெஜ்ரிவால் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு தலைவர்கள் உட்பட 23 பேரையும் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்ததை அடுத்து கேஜ்ரிவால் கண்ணீர் விட்டு அழுதார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு