இரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நெருங்குகிறது – டிரம்ப் முன் உள்ள 3 வாய்ப்புகள்

பட மூலாதாரம், EPA

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இரான் தவறினால், "ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும்" என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 8 மணிக்குள் இரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என டிரம்ப் முன்பு கெடு விதித்திருந்தார்.

இது தொடர்பாக தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், "ஒரு நாகரிகம் இன்றிரவு மொத்தமாக அழியும். அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடந்துவிடும். எனினும் தற்போது முழு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரம் குறைவான மனங்கள் இருப்பதால் புரட்சிகரமான, அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?"

"இன்று இரவு நமக்குத் தெரிந்துவிடும். உலகின் மிகவும் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. 47 ஆண்டுகால மிரட்டி பணம் பறித்தல், ஊழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். இரானின் சிறந்த மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இரானின் கார்க் தீவை அமெரிக்கப் படைகள் தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

'அமெரிக்கா சிவப்பு கோட்டைத் தாண்டினால்...'

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான பதிலடி தாக்குதலுக்கான இலக்குகளைத் தேர்வு செய்வதில் தாங்கள் கவனம் மற்றும் கணிசமான கட்டுப்பாட்டை கடைபிடித்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், "இனி இவை அனைத்தும் பின்பற்றப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவம் "சிவப்பு கோட்டை தாண்டினால் எங்களின் பதில் பிராந்தியத்தைக் கடந்து செல்லும்." என்றும் ஐ.ஆர்.ஜி.சி குறிப்பிட்டுள்ளது.

''அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு பல ஆண்டுகளுக்கு இடையூறு செய்வோம்'' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

பட மூலாதாரம், Getty Images

கார்க் தீவை தாக்கும் அமெரிக்கா

இரான் தொடர்பாக டிரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இரானின் கார்க் தீவு தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரானின் கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க படைகள் புதிய தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூசிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல்களில் எண்ணெய் உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படவில்லை என அந்த அதிகாரி தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் கார்க் தீவு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போது ராணுவ இலக்குகள் "முற்றிலும் அழிக்கப்பட்டதாக" டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இரானின் மிக முக்கியமான எண்ணெய் முனையம் அமைந்துள்ள கார்க் தீவு அந்நாட்டின் பொருளாதார உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்த தீவைக் கைப்பற்ற படைகளைத் தான் அனுப்பலாம் என டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், AFP

'போரை முடிக்க உள்ள இரண்டு வழிகள்' - ஜேடி வான்ஸ்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கார்க் தீவில் உள்ள சில ராணுவ இலக்குகளை தாக்குவதன் நோக்கங்கள் பற்றி தான் அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

"உலகத்தின் மீது எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பொருளாதார வலியை" கொண்டு வர இரான் முயற்சிக்கிறது எனக் கூறும் அவர் அதைவிட கூடுதல் வலியைத் தரும்

வலிமை அமெரிக்காவுக்கு உள்ளது என்றார்.

இரானிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும் என தான் உறுதியாக இருப்பதாகக் கூறும் அவர், "அவர்கள் சரியான பதிலைக் கொடுப்பார்கள் என நம்புகிறேன்." என்றும் தெரிவித்தார்.

இரானில் தனது ராணுவ நோக்கங்களை அமெரிக்கா "அடிப்படையில் முடித்துவிட்டதாக" எனத் தெரிவிக்கும் ஜேடி வான்ஸ், இந்தப் போர் முடிவுக்கு வரும் இயல்பு இரானியர்களின் கைகளில்தான் உள்ளது என்றார்.

மேலும் அவர் இந்தப் போர் முடிவுக்கு வர "இரண்டு வழிகள்" இருப்பதாகவும் கூறினார்.

அதில் ஒன்று,"இரானியர்கள் தாங்கள் ஒரு சகஜமான நாடாக இருக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். தாங்கள் பயங்கரவாதத்திற்கு நிதியுதவு செய்ய மாட்டோம் என்றும் வர்த்தகம் மற்றும் பரிமாற்றங்களுக்கான உலக அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கப்போகிறோம் என்றும் முடிவு செய்ய வேண்டும்." என்றார்.

"இரானியர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் அந்நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிக மிக மோசமாகத் தொடரும்" என்பதே மற்றொரு வழி என்றும் குறிப்பிட்டார்.

'டிரம்ப் முன்புள்ள 3 வாய்ப்புகள்'

அயோன் வெல்ஸ் பிபிசி

மூன்று விதமான சூழல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலாவதாக, டிரம்ப் தனது அச்சுறுத்தலிலிருந்து பின்வாங்கலாம். ஆனால், அவ்வாறு பின்வாங்கினால் தனது நம்பகத்தன்மையை அவர் எவ்வாறு தக்கவைப்பார் என்பது கடினமான கேள்வியாகும். இது எதிர்காலத்தில் அவர் விடுக்கும் அச்சுறுத்தல்களைப் பலவீனப்படுத்தும்.

இரண்டாவதாக, கடைசி நேரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம். இருப்பினும், தற்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மிகவும் முரணான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளனர். இந்தப் போருக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதற்கான உத்தரவாதங்களை இரான் எதிர்பார்க்கிறது.

மூன்றாவதாக, அவர் அச்சுறுத்தியது போலவே தாக்குதல்களை நடத்தலாம். அப்படி நடந்தால், அது இரான் ராணுவத்திற்கு மட்டுமல்லாமல் அந்நாட்டுப் பொதுமக்களுக்கும் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். என்ன மாதிரியான இடங்கள் தாக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து, வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்கலாம். அவர் அச்சுறுத்தியது போல மின் நிலையங்களை அழித்தால், அது ஒரு 'போர்க்குற்றம்' ஆகாது என்று சொல்ல முடியாது. ஆனால், டொனால்ட் டிரம்ப் நேற்று குறிப்பிட்டது போல, அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

படக்குறிப்பு, உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு