You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நாட்டுப்புற இசையை காக்க வெளிநாட்டு வேலையை உதறிய இளைஞர்கள்
பஞ்சாபின் நாட்டுப்புற இசையை மீட்டெடுக்கும் கனவுடன் இருக்கும் இந்த இளைஞர்கள், பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, பஞ்சாபின் பிரபலமான திருவிழாக்கள் மற்றும் கிராமப்புற நிகழ்வுகளில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வருகின்றனர்.
இந்த இளைஞர்கள் 'ஃபோக் டர்பனேட்டர்ஸ்' என்ற ஒரு இசைக் குழுவை நடத்தி வருகின்றனர். நேரலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, பஞ்சாபின் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் பிரபலமான திருவிழாக்களில் பாடுவது இந்த இளைஞர்களின் அடையாளமாக மாறியுள்ளது.
இந்த இளைஞர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக வெளிநாட்டிற்குச் சென்று அங்கேயே குடியேறினாலும், தங்கள் ஆசிரியரின் ஆலோசனையின் பேரில், பஞ்சாபின் நாட்டுப்புற இசையை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் பஞ்சாப் திருவிழாக்களில் பாடத் தொடங்கினர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு