You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு - நிதி ஒதுக்கீடு போதுமானதா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 6.81 லட்சம் கோடியாக இருந்தது. சமீபத்திய பட்ஜெட்டில் இது ரூ. 7.85 லட்சம் கோடியாக உள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தகவலின்படி, இந்த பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும்.
கடந்த ஆண்டு மே மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு பட்ஜெட் 15% உயர்த்தப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
அப்போதே இந்தியா பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை உயர்த்தக் கூடும் என ஊகிக்கப்பட்டது.
இந்த 15 சதவீத உயர்வு பாதுகாப்பு துறையில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யுமா?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு