You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'இரானை விட்டு அமெரிக்கா வெளியேறும்' - டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் ஹோர்மூஸ் நீரிணை பற்றி குறிப்பிட்டு பேசினார்.
"ஹோர்மூஸ் நீரிணை. அவர்கள் அங்கே நேராக சென்று, தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நீரிணையில் என்ன நடந்தாலும், அதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது," எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா இரானிலிருந்து வெளியேறுவது பற்றி பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று வாரங்களில் என்று சொல்லலாம். நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாக தாக்குகிறோம். நேற்று இரவு, ஏவுகணை தயாரிக்கும் பல முக்கிய நிலையங்களை நாங்கள் அழித்துவிட்டோம். நீங்கள் படித்திருக்கலாம் அல்லது எழுதியிருக்கலாம், நாங்கள் அவற்றை அழித்தோம். அமெரிக்கா இந்த போரில் இருந்து 2 அல்லது 3 வாரங்களில் வெளியேறுமா அல்லது முடித்துவிடுமா? 2 அல்லது 3 வாரங்களில் என்று நினைக்கிறேன். நாங்கள் வெளியேறுவோம்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு