You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இந்த 6 நாடுகள் எடுத்துள்ள வெவ்வேறு நடவடிக்கைகள் என்ன?
மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் உலக நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன.
இந்தச் சூழலை சமாளிக்க சிறப்பு விடுமுறை தொடங்கி மின்வெட்டு வரை பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில், எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளில் ஒன்றாக புதன்கிழமையை விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தில் ஏ.சி. பயன்பாட்டை குறைக்க மக்கள் கோட் - சூட்க்கு பதிலாக குறுகிய கை டி - ஷர்ட் அணியுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மியான்மரில் தனியார் வாகனங்கள் அவற்றின் பதிவு எண் அடிப்படையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகின்றன.
வங்கதேசத்தில், பல்கலைக்கழகங்களில் ரமலான் விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் திட்டமிட்ட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸில், சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
வியட்நாமில், எரிபொருளை சேமிக்க மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்துகிறது. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு