You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் - அதிர்ச்சியில் ஏற்றுமதித்துறை
அமெரிக்காவின் வரி நடவடிக்கையில் இருந்தே இந்தியா இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்திய ஏற்றுமதிக்கு மற்றொரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. இந்த முறை இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வந்துள்ளது.
Generalized System of Preferences எனப்படும் GSP-ன் கீழ் இந்தியாவின் சில பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த இறக்குமதி வரி விலக்கை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை வரிகள் ஒன்றின் பின் ஒன்றாக நீக்கப்பட்டு வரும் சூழலில், உலக வர்த்தக மேடையில் இந்தியா எதிர்கொள்ளும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
இது இந்தியாவிற்கு ஒரு புதிய அடி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம் ஐரோப்பிய சந்தையை பெரிதும் நம்பியுள்ள திருப்பூர் ஜவுளித் துறை இதனால் பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இந்த காணொளியில் காணலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு