You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய தடகளத்தில் முத்திரை பதித்த அஞ்சு பாபி ஜார்ஜ்
அஞ்சு பாபி ஜார்ஜ்...
2003-ஆம் ஆண்டு பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற போது, இவர் ஒரு தலைசிறந்த வீரராகவும், முன்னுதாரணமாகவும் மாறினார். அந்த சமயத்தில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் அதுதான்.
இன்று, பிபிசி ‘இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின்' தேர்வுக்குழுவின் உறுப்பினராக அவர் அங்கம் வகிக்கிறார்.
கேரளாவில் ஒரு சிறிய ஊரில் பிறந்த அவர் தடகளத்திற்குள் கால் பதித்தது எப்படி? விளையாட்டில் சேரும் முடிவுக்கு குடும்பத்தினர் என்ன சொன்னார்கள்? கணவர் பாபி ஜார்ஜை சந்தித்தது எப்படி? இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உறவும், பயிற்சியாளர்-வீராங்கனை உறவும் எப்படி இருந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு அஞ்சு பாபி ஜார்ஜ் பதிலளித்துள்ளார்.
அவருடனான உரையாடல்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு