You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட் அருங்காட்சியகம்
மும்பை வான்கடே மைதானத்தின் உள்ளே அமைந்துள்ள 'சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில்' காட்சிப்படுத்தப்பட்டுள்ள சில முக்கிய நினைவுப் பொருட்கள் இவை. மும்பை கிரிக்கெட் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் இந்த அருங்காட்சியகம், இந்திய கிரிக்கெட்டின் செழுமையான வரலாற்றையும், வான்கடே மைதானத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களையும் கண்முன் கொண்டுவருகிறது.
பார்வையாளர்கள் மைதானத்தின் கேலரிகள், செய்தியாளர் அறை மற்றும் 2011 ஐசிசி ஆடவர் உலகக்கோப்பையில் எம்.எஸ். தோனி அடித்த அந்த வெற்றி சிக்ஸர் விழுந்த இடம் ஆகியவற்றையும் நேரில் பார்க்கலாம். சிலருக்கு கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் அமர்ந்து ஓய்வெடுத்த அதே அறையை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு