நிலச்சரிவால் நிலைகுலைந்த இலங்கை (புகைப்படத் தொகுப்பு)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய கால நிலை காரணமாக ஆறு மாவட்டங்களில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 91 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, களுத்துறை மாவட்டத்தில் 5 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு அனர்த்தத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 110 பேர் காணாமல் போயுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரத்தினபுரி மாவட்டத்தில் 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதையுண்டு தாய், மகள் உள்ளிட்ட 10 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்பு மாவட்டம் அவிசாவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்