விஜயின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து

பட மூலாதாரம், TVK
"பொதுமக்கள் பாதுகாப்பு கருதி" வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,"வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தவில்லை" என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக "வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,"பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லை" என கூறப்பட்டுள்ளது.
"சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்" எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.




