You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாக்குச்சாவடிக்கு நாங்கள் வரக்கூடாதா? பிரிட்டன் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த நாய்கள்
பிரிட்டன் எங்கும் பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், அவர்களின் நாய்களும் தங்களின் வாக்குரிமையை செலுத்துவது போல் வாக்குச்சாவடிகளில் காத்திருப்பதால், எதிர்பார்த்தபடி #DogsAtPollingstations (வாக்குச்சாவடிகளில் நாய்கள்) என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் வைரலானது.
இன்று வியாழக்கிழமை காலையில் வாக்குச்சாவடிகள் திறந்தவுடன் பலரும் வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் தங்களின் நாய்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு நேரத்தில் மேற்கூறிய ஹேஷ்டேக் பல ஆயிரம் தடவைகள் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 8000-க்கும் மேற்பட்ட டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்