ஜிம்பாப்வே தலைநகரில் வீதிகளில் உணவு விற்க தடை

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் டைஃபாய்டு காய்ச்சல் பெருமளவு பரவி வருவதால் வீதிகளில் உணவு விற்பதற்கு தடை விதிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த மாதம் வரையில் 13 வயது சிறுமி உட்பட இரண்டு பேர் டைஃபாய்டு காய்ச்சலில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் அதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சாலையோர விற்பனையாளர்கள், தங்களின் ஒரே வருமானம் இதுதான் என்று கூறும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் விற்பனையை தொடங்கிவிட்டனர்.

காலரா நோய்கான ஆபத்தும் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு அதிக அளவில் காலரா நோய் பரவியதில் 4000 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தனர் மேலும் 1500 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.