You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மாமல்லன் நீர்த்தேக்க திட்டத்தை மீனவர்கள் எதிர்ப்பது ஏன்?
சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ‘மாமல்லன் நீர்த்தேக்கம்’ என அழைக்கப்படும் நீர்த்தேக்கத்திற்கான பணிகள் சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இடையே இந்த நீர்த்தேக்கம் அமைய இருக்கிறது.
ஆனால் இந்த நீர்த்தேக்கம் வந்தால் இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நீர்நிலை எங்கு அமைய இருக்கிறது, இதன் பயன்களாக அரசு கூறுவது என்ன, இதனால் பாதிக்கப்படுவதாகக் கூறும் மீனவர்கள் தெரிவிக்கும் கவலைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு