You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: காயம்பட்டவரை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.
சஞ்சய் குமார் என்பவர் தீக்காயங்களுடன் ஜார்க்கண்டின் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று (பிப்ரவரி 23) இரவு ராஞ்சியில் இருந்து புறப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ் ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்துக்குட்பட்ட கசாரியா பஞ்சாயத்துக்கு அருகே விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானம் ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் ‘Beechcraft C90’ வகையை சேர்ந்தது என பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
இந்த விபத்தில் ஏர் ஆம்புலன்ஸில் பயணித்த 7 பேரும் உயிரிழந்ததாக இணை ஆணையர் கீர்த்திஸ்ரீ ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து விசாரிக்க விமான விபத்து விசாரணைப் பணியகம் விரைந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு