You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் படைத்த சாதனைகள்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். அவர் தலைமையில், இந்தியா 2025 ஐசிசி மகளிர் உலக கோப்பை வென்றது.
நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
1989ஆம் ஆண்டு பஞ்சாபில் விளையாட்டு ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார்.
இவர் பிறந்த அன்று, 'குட் பேட்டிங்' என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை இவருக்காக தந்தை வாங்கினார்.
தனது சகோதரர்களுடன் தெருக்களில் விளையாட தொடங்கினார்.
2009-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆல்-ரவுண்டராக அறியப்படுகிறார்.
ஒருநாள் போட்டிகளில் 4,400-க்கும் மேற்பட்ட ரன்களையும், டி20-ல் 3,600-க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார்.
2017-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2026-ல் பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
டைம் பத்திரிகையின் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த 100 வளர்ந்து வரும் 'லீடர்ஸ்' பட்டியலில் இடம்பெற்றார்.
பஞ்சாபின் முல்லான்பூரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஓர் அரங்குக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு