You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சோளக்குருவிகள் கூடிய காட்சி
ஆயிரக்கணக்கான சோளக்குருவிகள் ஒன்றாக பறந்த தருணம் இது. இது, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘க்ரோனோபோட்டோகிராபி’ என்ற தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பறவைகள் இங்கு வருகின்றன, ஏனெனில் இங்கு குளிர் மிதமாக இருக்கிறது. சில நேரங்களில் சில நூறு எண்ணிக்கையிலும் சில நேரங்களில் ஒரே நேரத்தில் பத்து லட்சம் பறவைகளாகவும் கூடும்.
அவை ஏன் இப்படிக் கூடுகின்றன என்பது முழுமையாக நமக்கு தெரியவில்லை.
கதகதைப்பை விரும்புவதுடன் தொடர்புடையதாக கூட இருக்கலாம்.
அவை மிகவும் சமூகத் தன்மை கொண்டவை என்பதால், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இருக்கலாம்.
அவை ஒன்றாகக் கீச்சிடும் சத்தத்தை நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக கூட்டமாக இருப்பதில் உள்ள பாதுகாப்பும் பலமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு