You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மாணவர்கள், இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தலைவர்கள் - பிபிசி தமிழ் மகளிர் குரல்
வாக்காளர் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமாக பெண்கள். ஆனால் அரசியலில் அவர்களின் குரல் எவ்வளவு தூரம் எதிரொலிக்கிறது?
பெண்களுக்கான திட்டங்களை வகுப்பதில் அரசியல் கட்சிகள் போதுமான கவனம் செலுத்துகின்றனவா?
உடல் உழைப்பில் ஈடுபடும் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் என்னென்ன?
பெண்களின் பல்வேறு சமூகப் பிரிவுகளின் குரலுக்கு அரசியல் மேடைகளில் அங்கீகாரம் கிடைக்கிறதா?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அவை இடம் பெறுகின்றனவா?
இந்தக் கேள்விகளை நேராக முன்வைக்கும் ஒரு மனம் திறந்த மேடை... பிபிசி தமிழ் வழங்கும், 'மகளிர் குரல்'
பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் நேருக்கு நேர்.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிடல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன்,
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செம்மலை,
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன்,
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா,
பா.ஜ.கவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர்
ஆகியோரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய மகளிரும், இளைய தலைமுறையும்.
சென்னையில் நடந்த பிபிசி தமிழின் மகளிர் குரல் நிகழ்ச்சியில், அந்த தலைவர்களின் பதில் என்ன?
உங்கள் பிபிசி தமிழின் இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில். இந்த வாரம் முழுவதும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு