You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கார் பார்க்கிங்கில் திருமணம் செய்த இஸ்ரேலிய ஜோடி - ஏன்?
ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வணிக வளாகத்தின் தரைதளத்திற்கு நான்கு தளங்கள் கீழே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இஸ்ரேலிய தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இரானுடனான மோதல் தொடங்கியதில் இஸ்ரேலில் இருந்து மக்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
மணமகன் மைக்கேல் மரியானோஃப்: "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எங்களது வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாள். இன்று காலை நான் வருத்தத்துடன் எழுந்தேன். அதே நேரம், இந்த நாள், குடும்பம், நண்பர்கள் மற்றும் இந்த நிகழ்வுதான் முக்கியம் என உணர்ந்தேன். திருமணம் செய்துகொள்வதும், இந்த நாட்டிலேயே அந்தச் சடங்கை நடத்துவதும்தான் முக்கியம் என்று தோன்றியது. இது நாங்கள் எதிர்பார்த்ததாகவோ அல்லது காத்திருந்த ஒன்றாகவோ இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது முக்கியமானது".
மணமகள் லியோர் லாஸ்ரி: "இது ஒரு பாதுகாப்பான இடம். இங்கு பல பேர் கூடியிருக்க முடியும். இறுதியாக இந்த திருமணம் நடைபெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே வந்திருக்கும் அனைவரும் எங்களுடன் இருப்பதை கண்டு நெகிழ்ச்சியாக உள்ளது. நாம் திட்டங்களை வகுக்கிறோம், ஆனால் அதை தீர்மானிப்து
நாம் அல்ல. நமது திட்டங்களை விடவும் இந்த முடிவு இன்னும் சிறப்பாக அமைந்துவிட்டது".
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு