இந்தியாவின் வெற்றி தருணங்களை காட்டும் 10 புகைப்படங்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஆமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்தியா.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

போட்டியின் முக்கிய புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.

2007 மற்றும் 2024-ல் வென்ற பிறகு, இந்தியா இப்போது 2026இல் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் அற்புதமாக செயல்பட்டனர்.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் அடித்தார். இது இந்த டி20 உலகக் கோப்பையில் சாம்சனின் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பவர்பிளே முடிவில் இந்திய அணி 92 ரன்கள் விளாசியிருந்தது.

போட்டியின் கடைசி கட்டத்தில் பும்ரா வரிசையாக விக்கெட்டுகள் வீழ்த்த 19-வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி உலக சாம்பியன் ஆனது.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு