காணொளி: மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்
காணொளி: மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்
மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஷுவேந்து சர்கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் குமார்கஞ்சில் உள்ள 24-ஆம் வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் ஷுவேந்து சர்காரை திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளரை அவரது பாதுகாப்பு பணியாளர்கள் அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்றனர். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு