You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'பெண்களுக்கான தடையை என்னால் உடைக்க முடிந்தது' - அஞ்சலி பகவத்
2025-ஆம் ஆண்டிற்கான பிபிசியின் வாழ்நாள் சாதனையாளர் விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அஞ்சலி பகவத் பெற்றுள்ளார். இவர் மத்திய அரசின் கேல் ரத்னா விருதும் வென்றுள்ளார்.
விருது தொடர்பாக பேசிய அவர், "துப்பாக்கி சுடுதல் தான் எனது வாழ்க்கை, நான் களத்தில் இல்லையென்றால் ஏதோ ஒன்று இல்லாமல் இருப்பது போலத் தோன்றும். அர்ப்பணிப்பும் உறுதிப்பாடும் எனக்கு உதவியது. பல பெண்களுக்கான தடையை என்னால் உடைக்க முடிந்தது. இந்திய துப்பாக்கி சுடுதல் ஒரு உச்சத்தை எட்டியுள்ளது, கடின உழைப்புக்கு எந்த மாற்றும் கிடையாது.
"இந்த விருதை பெறுவது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. 40 ஆண்டுகளாக இந்த இலக்கை துரத்தி வருகிறேன். இன்று நிதானித்து எனது பயணத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வைக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டைத் தொடர்வது என முடிவெடுப்பது மிகவும் கடினமானதாகவும் செலவு மிகுந்ததாகவும் உள்ளது. இந்தக் விருது என்னுடையது மட்டுமல்ல. எனக்காகவும் எனது அணியினருக்காகவும் நான் இதைச் செய்ய முடியும் என நம்பிக்கை வைத்த எனது பயிற்சியாளர்களுக்குமானது. நாங்கள் அடுத்த தலைமுறைக்கான வழியை ஏற்படுத்தினோம். கடின உழைப்புக்கு எந்த மாற்றும் இல்லையென்றாலும் இந்த செயல்முறையை ரசியுங்கள்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு